ராகுல்காந்தி-சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் சந்தித்தது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி ஏற்படுவதற்கு ஒரு அச்சாரமாகவே இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதை தான் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பா.ஜ.கவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் சொன்ன கருத்து முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்