ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு இணையான செய்தி விரைவில் வரும்: மிரட்டல் விடுத்த கேரளா பா.ஜ.க. தலைவருக்கு மிரட்டல்

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு இணையான செய்தி விரைவில் வரும்: மிரட்டல் விடுத்த கேரளா பா.ஜ.க. தலைவருக்கு மிரட்டல்

சபரிமலையில் பெண்கள் அனுமதிப்பது தொடர்பான சர்ச்சை சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னரும் இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது அந்த பிரச்சனை கொலைமிரட்டல் விடும் அளவுக்கு தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் என்பவருக்கு மும்பையில் இருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த மிரட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கேரள மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு தபால் மூலம் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நான் மும்பையை சேர்ந்த 66 வயது மலையாளி. நான் மும்பையில் இருந்து கேரளாவுக்கு வந்து ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பா.ஜ.க. நடத்தும் ரத யாத்திரையில் கலந்து கொள்ளப் போகிறேன். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு இணையான செய்தியை நான் ஏற்படுத்தப்போகிறேன்

இந்த கடிதம் குறித்து கேரள போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்,

 

Leave a Reply