இன்றைய ராசிபலன்கள் 05/11/2018

இன்றைய ராசிபலன்கள் 05/11/2018

மேஷம்
இன்று சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
ராசி பலன்கள்

ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
ராசி பலன்கள்

மிதுனம்
இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
ராசி பலன்கள்

கடகம்
இன்று எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
ராசி பலன்கள்

சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ராசி பலன்கள்

கன்னி
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ராசி பலன்கள்

துலாம்
இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6
ராசி பலன்கள்

விருச்சிகம்
இன்று வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்

தனுசு
இன்று புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6
ராசி பலன்கள்

மகரம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9
ராசி பலன்கள்

கும்பம்
இன்று குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
ராசி பலன்கள்

மீனம்
இன்று பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6
ராசி பலன்கள்

Leave a Reply