ஜெர்மனியில் ஹிட்லர், இந்தியாவில் மோடி: மல்லிகார்ஜுனா கார்கே
ஜெர்மனியில் ஹிட்லர் அந்நாட்டு மக்களை கொடுமைப்படுத்தியது போல் இந்தியாவில் மோடி இந்திய மக்களை கொடுமைப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய மல்லிகார்ஜுனா கார்கே, ‘மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு நாட்டை சீரழித்து வருவதாகவும், நாட்டில் உள்ள அமைப்புகளை அழித்து வந்ததைப்போல் இந்தியாவின் அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் எண்ணத்துக்கு காங்கிரஸ் இடமளிக்காது என்றும் கூறினார்.
பாஜகவின் 4 ஆண்டுகள் ஆட்சியில் சரியான பாதையில் 4 அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை என்றும், காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாக என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் உரிமை பாஜகவினர்களுக்கு இல்லை என்றும் மல்லிகார்ஜுனா கார்கே கூறினார்
மேலும் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் அந்நாட்டுக்கு என்ன செய்தாரோ, அதையே இந்தியாவுக்கு செய்ய வேண்டும் என மோடி நினைப்பதாகவும், தற்போது அரசியலமைப்பு சட்டம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும் எனவும் மல்லிகார்ஜுனா கார்கே வலியுறுத்தினார்.