சீனாவுடன் போர் தொடுத்தால் தோல்விதான் கிடைக்கும்: டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஆணையம்
தற்போதாஇய சூழ்நிலையில் சீனா அல்லது ரஷ்யாவுடன் அமெரிக்கா போர் தொடுத்தால் வெற்றி பெற மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலை வரும் அல்லது தோல்வி கிடைக்கும் என அதிபர் டிரம்புக்கு அமெரிக்க ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க முப்படைகளின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றம் நியமனம் செய்தது. இந்த ஆணையம், அமெரிக்க பாதுகாப்பு படைகளின் போர் யுக்தி, அவற்றின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது.. இதன் முடிவில், அமெரிக்க முப்படைகளின் போர் திறனை அதிகரிக்க, அவசர அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தேவை என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தை ஆய்வு செய்த பின்னர் அளிக்கப்பட்ட அறிக்கையில் தற்போதைய சூழலில், சீனாவோடு, போர் தொடுத்தால், அமெரிக்கா தோற்றுப்போக நேரிடும் என, அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு ஆய்வு ஆணையம், டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறது.