கரையை கடந்தது கஜா புயல்: 8 பேர் பலி
வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடந்த 2 நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை கரையை கடந்தது. கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையைக் கடந்தது என்றும் முழுமையான புயல் கரையை கடக்க இன்னும் சில நிமிடங்கள் ஆகும் என்றும் வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
இந்தத புயலால் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து பலத்த சேதங்கள் அடைந்துள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயல் கரையை கடந்த சில நிமிடங்களில் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் இந்த புயல் காரணமாக இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பட்டுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய நால்வர் சுவர் இடிந்தாதால் பலியாகியுள்ளனர் மேலும் கடலூர் அருகே மின்வயர் அறுந்து விழுந்து ஆனந்தன் என்பவரும், விருத்தாச்சலம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் என்ற பெண்ணும் திருவண்ணாமலை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பிரியாமணி என்ற சிறுமியும் அதிராம்பட்டிணத்தில் திராவிட மணி என்ற சிறுமி சுவர் இடிந்ததாலும் உயிரிழந்துள்ளனர்.