சொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை

சொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, கஜ்வால் பேரவை தொகுதியில் அந்த மாநில காபந்து முதல்வர் சந்திரசேகர் ராவ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து மதிப்பு ரூ. 22. 61 கோடி என்றும், சொந்தமாக கார் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சின்னம் காராக இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவரும், காபந்து முதல்வருமான சந்திரசேகர் ராவிடம் சொந்தமாக கார் இல்லை என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம்: 2014-ஆம் ஆண்டு வேட்பு மனு தாக்கலின் போது ரூ. 15. 95 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு 41 சதவீதம் உயர்ந்து ரூ. 22.61 கோடியாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 16 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டு ரூ. 7.87 கோடியாக இருந்த கடன் மதிப்பு தற்போது ஒரு கோடி அதிகரித்து ரூ. 8.89 கோடி கடன் உள்ளது என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தெலங்கானா மாநில பிரிவினை தொடர்பாக 64 குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply