கஜா புயல்: பலீயானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு
தமிழகத்தை இன்று காலை கஜா புயல் கரையை கடந்த நிலையில் இன்று காலை 8 பேர் வரை இந்த புயலுக்கு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்த தகவலின்படி இந்த புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.