விஜய் படத்திற்கு நாயகியாகும் விஜய் தேவரகொண்டா நாயகி
அர்ஜூன் ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்த ராஷ்மிகா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் இவர்தான் ‘தளபதி 63’ படத்தின் நாயகி என்று கூறப்படுகிறது.
தளபதி 63 படத்தின் நாயகியாக நயன்தாரா, சமந்தா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின்படி இந்த படத்தின் ஒரு நாயகியாக ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் ராஷ்மிகாவின் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா தான் ‘தளபதி 63’ படத்தின் ஹீரோயின் என டுவிட்டரில் பதிவிட்டு, அதில் அட்லீ, விஜய் ஆகியோரையும் இணைத்துள்ளார். ராஷ்மிகா அந்த டுவீட்டுக்கு கீழே, ‘டேய்… எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா…’ என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.