ஆந்திராவை அடுத்து சிபிஐ நுழைய தடை விதித்த மேற்குவங்கம்
சிபிஐ என்பது வானளாவிய அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு என்றும், சிபிஐ அதிகாரிகள் நினைத்தால் இந்தியாவின் எந்த பகுதியிலும் நுழைந்து சோதனை செய்யலாம் என்று இருந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தில் சிபிஐ நுழைய தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். ஆந்திராவில் சிபிஐ சோதனை செய்ய வேண்டும் என்றால் மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என்றும், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆந்திராவை போன்றே மேற்குவங்க மாநிலமும் இதேபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மேலும் மேற்கு வங்கத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் நுழைவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, மாநில அரசின் தடையில்லா சான்று திரும்ப பெற்றுக்கொள்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார். இதனால் இனிமேல் மேற்குவங்க மாநில அரசின் முன் அனுமதியின்றி சி.பி.ஐ. அதிகாரிகள் எந்தவொரு சோதனைக்கும் மாநிலத்திற்குள் நுழைய முடியாது.
இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சிபிஐக்கு எதிரான உத்தரவை பிறப்பித்துள்ளதை அடுத்து இன்னும் சில மாநிலன்க்களும் இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.