கஜா புயல் பாதிப்புகளை குறைத்திருக்கலாம்: மு.க.ஸ்டாலின்
நேற்று தமிழகத்தில் கரை கடந்த கஜா புயலால் கோடிக்கணக்கான மதிப்பில் சேதமும் சுமார் 40 உயிர்களும் பலியாகியுள்ளது. தமிழக அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தும் 40 உயிர் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கஜா புயல் வரும் என மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்திருந்ததால் ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது என்றும், இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த மு.க.ஸ்டாலின் இன்று மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்திருந்ததால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக கூறியிருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.