மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த் தேர்தலில் இப்ராஹிம் முகமது சாலிஹ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து அவர் இன்று மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சாலிஹ் பதவியேற்கவுள்ளார்
இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி உள்பட பல நாட்டின் பிரதமர்கள், அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இப்ராஹிம் முகமது சாலிஹ் அவர்களின் அழைப்பை ஏற்று இன்று பாரத பிரதமர் நரெந்திரமோடி மாலத்தீவுக்கு சென்றார். மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு மக்கல் உற்சாக வரவேற்பு அளித்தனர்.