ஆந்திரா, மேற்குவங்கத்திற்கு அச்சம்: நிதிமந்திரி அருண்ஜெட்லி
ஆந்திரபிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் சிபிஐ அமைப்பு மாநில அரசின் அனுமதியில்லாமல் நுழைய கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைப்பதற்கு நிறைய வைத்து இருப்பவர்கள் சி.பி.ஐ. அமைப்பிற்கு பயப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் ஊழல் விவகாரத்தில் எந்த மாநிலத்தின் மீதும் இறையாண்மை என்பது கிடையாது. ஆந்திராவின் நடவடிக்கையானது அச்சத்தினால் ஏற்பட்டு உள்ளது. இந்த தருணத்தில் இதனை தவிர்த்து வேறு எதுவும் நான் கூறவில்லை
இந்தியாவில் மத்திய அமைப்பு ஒன்றை நாம் கொண்டுள்ளோம். இதன் கீழ் தொடக்கத்தில் அரசு ஊழியர்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட சி.பி.ஐ. அமைப்பு ஆனது, மாநிலங்கள் அல்லது நீதிமன்றங்கள் பரிந்துரைக்கும் சில தீவிர வழக்குகளையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது என அவர் கூறியுள்ளார்.