ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்: பழனி அருகே பரபரப்பு
பீகாரை சேர்ந்த பெண் ஒருவருக்கு பழனி அருகே ஓடும் பேருந்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பழனி அருகே கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்ய பீகாரை சேர்ந்த ஆலமியான் என்பவர் தனது மனைவி ராபினாவுடன் பேருந்தில் வந்துள்ளார். ஈரோடிலிருந்து பழனி செல்லும் பேருந்தில் அவர்கள் இருவரும் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பேருந்து தாராபுரம் அருகே வந்த போது ராபீனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால், பேருந்து ஓட்டுனர், பேருந்தை இடையில் நிறுத்தாமல் தாராபுரம் நோக்கி வேகமாக ஓட்டிவந்தார். ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு பேருந்திலேயே அழகான ஆண்குழந்தை பிறந்தது. தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.