தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்?

தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு: ‘2.0’ ரிலீஸ் என்ன ஆகும்?

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களை கடந்த வாரம் கஜா புயல் பெரும் சேதத்தை உண்டாக்கி சென்றுள்ளது. அந்த பகுதியில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தாலும் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என, வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம், இந்த தாழ்வு நிலை சேலம் நோக்கி நகர்வதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டெல்டா பகுதிகளில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 29ஆம் தேதி இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றுவதால் தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார். அதே தேதியில்தான் ரஜினியின் 2.0 ரிலீ’ஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply