10 மாவட்டங்களில் கனமழை: மண்டலமாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு
தமிழகத்தில் நேற்று நள்ளிரவு முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருவதாகவும், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதே இந்த மழைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்பதால் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் குறிப்பாக குழந்தைகளும் முதியோர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது