பிடிபட்ட 1000 கிலோ இறைச்சி ஆட்டிறைச்சிதான்: ஆய்வில் தகவல்

பிடிபட்ட 1000 கிலோ இறைச்சி ஆட்டிறைச்சிதான்: ஆய்வில் தகவல்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 1000 கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பிடிபட்டது என்ன இறைச்சி என்று ஆய்வுக்கு அனுப்பி சோதனை செய்யும் முன்னரே பல ஊடகங்கள் பிடிபட்டது நாய் இறைச்சி என்று செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் அந்த இறைச்சி வேளச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறிதான்; நாய்க்கறி அல்ல என சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி ஆய்வில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply