கஜா புயல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் நவம்பர் 24-ம் தேதி நடக்க இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கபப்ட்டுள்ளதா டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு செய்துள்ளது. அதேபோல் கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் இன்றும், நாளையும் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

மேலும் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த அரசு சட்டக் கல்லூரி மற்றும் சீர்மிகு சட்டக் கல்லூரி தேர்வுககளும், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply