வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய்: தமிழக அரசு உத்தரவு
கஜா புயலினால் ஏராளமான டெல்டா மாவட்டங்களில் ஏராளமான குடிசைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டதால் தற்போது அப்பகுதி மக்களில் பலர் வீடில்லாமல் வெட்ட வெளியில் உள்ளனர்.
இந்த நிலையில் டெல்டா பகுதியின் பல இடங்களின் மீண்டும் மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கடும் சிரமத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் புயல் பாதித்த மாவட்டங்களில் உடனடியாக தார்ப்பாய் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் வழங்கப்படும் என்றும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் டெல்டா மக்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.