இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று காலை சரியாக 9.57 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரோ விஞ்ஞானிகள், இந்தியர்களை பெருமை பட வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.