நான் இந்தியா திரும்பினால் என்னை கொன்றுவிடுவார்கள்: பிரபல வைரவியாபாரி

நான் இந்தியா திரும்பினால் என்னை கொன்றுவிடுவார்கள்: பிரபல வைரவியாபாரி

பிரபல வைரவியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அவரை கண்டுபிடித்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நிரவ் மோடியை பொருளாதர குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீது கோர்ட்டில் விசாரணை நேற்று நடந்தது. இந்த விசாரணையின்போது நிரவ் மோடியின் வழக்கறிஞர் கூறியதாவது: எனது கட்சிக்காரர் நாடு திரும்பினால் அவரை கொன்று விடுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே பாதுகாப்பு காரணம் கருதி அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. அதேநேரம் தான் விசாரணைக்கு ஆஜராக முடியாதது பற்றி அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார்” என்று வாதிட்டார்.

ஆனால் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளாத அமலாக்கத்துறை வக்கீல்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் நிரவ் மோடி அதுபற்றி போலீசில் புகார் செய்திருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை என்று வாதிட்டனர்.

#NiravModi #India #PNBFraud

Leave a Reply