“ஒபெக்” அமைப்பில் இருந்து விலகியது கத்தார்

“ஒபெக்” அமைப்பில் இருந்து விலகியது கத்தார்

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச அமைப்பான “ஒபெக்” என்ற அமைப்பில் இருந்து விலகுவதாக கத்தார் அறிவித்துள்ளதால் வளைகுடா நாடுகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் கத்தார், எரிவாயு ஏற்றுமதியில் கவனம் செலுத்த வருகின்ற ஜனவரி முதல் “ஒபெக்” அமைப்பில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளது.

தீவரவாதத்திற்கு உதவுவதாக கத்தார் மீது சில அரபு நாடுகள் பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தடைகளும் விதித்துள்ள நிலையில், ஒபெக் அமைப்பில் விலகுவதாக காத்தார் எடுத்துள்ள முடிவு மற்ற நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அமைப்பில் கத்தார் 57 ஆண்டுகளாக உறுப்பினராக அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply