பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் வர விடமாட்டோம்: வைகோ

பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் வர விடமாட்டோம்: வைகோ

தேர்தல் பிரசாரத்திற்காக கூட பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் வர விடமாட்டோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வீசிய கஜா புயலால் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் முதல்கட்ட தவணையாக வெறும் ரூ.350 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கஜா புயலால் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.

மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்ய கூட பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு நாட்டின் பிரதமரை வைகோ இவ்வாறு கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply