அஜித் படத்தின் ஆடியோ உரிமை: அசர வைக்கும் விலையில் வியாபாரம்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இப்போது முதலே அஜித் ரசிகர்கள் வரவேற்க தயாராகிவிட்டனர்.
இந்த படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை அடுத்தடுத்த சில நாட்களில் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முதல்முறையாக அஜித்துடன் டி.இமான் இணைந்துள்ளதால் ஆடியோ உரிமைக்கு பெரும் போட்டி இருந்தது. கடைசியில் ‘லஹரி’ நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு ஆடியோ உரிமையை பெற்றுள்ளது.
இந்த படத்தில் அஜித்தின் அறிமுகப்பாடல் மற்றும் இமான் ஸ்டைல் மெலடி பாடல் உள்பட மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
அஜித் ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்த் தம்பி ராமையா, விவேக், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது