எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: கனிமொழி பாராட்டு

எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: கனிமொழி பாராட்டு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இன்று சென்னையில் நடைபெற்ற அமைதிப்பேரணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் திமுக எம்பியுமான கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா குறித்து கூறியதாவது: ”ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் உலகில் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு சமாளிப்பது அத்தனை எளிதான காரியமல்ல. மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, எதிர்நீச்சல் போட்டு வெற்றிகரமாக வலம் வந்தார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிர்ஷடவசமானவை” என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply