சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உடைந்த கண்ணாடி:
சென்னை விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை சுமார் ரூ.2,200 கோடி செலவில் கடந்த 2013ல் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 2 முனையங்களும், கடந்த 2013ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
ஆனால் சீரமைக்கப்பட்ட நாள் முதல் கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது தொடர் கதையாக மாறிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக கண்ணாடி மாளிகைபோல் கட்டி முடிக்கப்பட்ட முனையங்களில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வந்தன.
இந்நிலையில் இன்று சென்னை ஏர்போர்ட்டில் 83வது முறையாக கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. இதில், ஏர்போர்ட்டின் உள்நாட்டு முணையத்தின் 3வது நுழை வாயிலின் 4 கண்ணாடிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.