ஐந்து மாநில தேர்தல்: இன்று வாக்குப்பதிவு, வெற்றி பெறுவது யார்?
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.
ஒரு மினி பாராளுமன்ற தேர்தல் போல் நடந்துள்ள இந்த தேர்தலில் 8,500 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்திருந்தபோதிலும், கருத்துக்கணிப்புகள் முற்றிலும் சரியாக இருக்குமா? என்பது கேள்விக்குறியே
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தற்போது, பாஜக அரசும், மிசோரமில், காங்கிரஸ் அரசும், தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசும் அமைந்துள்ளன. இதே அரசு மீண்டும் அமையுமா? அல்லது ஆட்சி மாறுமா? என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்