ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளை திருமணம் செய்த வாலிபர்
கென்யா நாட்டில் உள்ள கஜியாடோ என்ற மாகாணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்த நிலையில் தற்போது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் திருமணம் செய்ய விரும்பினாஅர். இதுகுறித்து அந்த வாலிபர் தனது இரு காதலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதமும் பெற்றுள்ளார்.
வாலிபரின் விருப்பத்திற்கு இரு காதலிகளும் சம்மதம் தெரிவிக்கவே உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அந்த வாலிபர் தனது இரண்டு காதலிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த பின்னர் இரண்டு மணப்பெண்களும் ஜாலியாக ஆடிப்பாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். கென்யாவில் பலதார மணம் என்பது சகஜம் என்றாலும், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் அவருக்கு இரண்டு காதலிகளுடனும் முதலிரவும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது