ஓட்டு வங்கி அரசியலுக்காக மதவெறியை பரப்புவதா? ஸ்டாலினுக்கு தமிழிசை கண்டனம்
திமுக தலைவர் ஓட்டு வங்கி அரசியலுக்காக மதவெறியை பரப்புவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை ஆலோசனை என்ற பெயரில் கூட்டணி சேர்க்க ஸ்டாலின் கூட்டம் நடத்தியதாகவும், கிறிஸ்துமஸ் விழா’ என்ற பெயரில் ஸ்டாலின், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக பேசுவதாக கூறி, சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு, குளிர்காய நினைப்பதாகவும் குற்றம் தமிழிசை சாட்டியுள்ளார்.
மேலும் ஓட்டு வங்கி அரசியலுக்காக மதவெறி பரப்புவது, சிறுபான்மை மக்களை பிரிப்பது, தி.மு.க.வும், காங்கிரசும் தான் என்றும் கூறிய தமிழிசை, இதை பாஜக வன்மையாக கண்டிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.