ரஷ்ய கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன்

ரஷ்ய கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன்

ரஷ்யாவின் கூகுள் என அழைக்கப்படும் யான்டெக்ஸ் (Yandex) நிறுவனம் அதே பெயரில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் 1990-களில் உருவாக்கப்பட்ட யான்டெக்ஸ் தேடு இயந்திரம், ரஷ்யா உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளில் முன்னிலையில் இருக்கிறது.

உலகம் முழுவதும் கூகுள் முன்னிலையில் இருந்தாலும், ரஷ்யாவில் யான்டெக்ஸ்தான் முன்னணியில் உள்ளது. கூகுள்போலவே யான்டெக்சும், தேடல் தவிர பிரவுசர், இமெயில், இ-காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறது.

தற்போது யான்டெக்ஸ் ஸ்மார்ட்போன் பிரிவிலும் அடியெடுத்து வைத்துள்ளது. ரஷ்யாவில் கூகுள் போட்டியைச் சமாளிக்கும் வகையில் அந்நிறுவனம், புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது. ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த போன் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. யான்டெக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘அலைஸ்’ எனும் டிஜிட்டல் உதவியாளர் சேவையும் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply