கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக தமிழக அரசு, தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீதான நடவடிக்கை பற்றி 4 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கூ தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.