பள்ளி சீருடையில் சிப்: வீட்டில் இருந்தவாறே பெற்றோர் கண்காணிக்கலாம்
சீனாவில் உள்ள பள்ளி குழந்தைகளின் சீருடையில் சிப் பொருத்தப்பட்டிருப்பதால் இனி தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் செல்போன் ஆப் மூலம் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்க முடியும். இந்த நடைமுறையால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
முதல்கட்டமாக சீனாவில் உள்ள குயிஷூ மற்றும் குயான்ஸி மாகாணங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் சீருடைகளில் இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து படிப்படியாக நாடு முழுவதும் இந்த நடைமுறை அமலுக்கு வரும்
சீருடையில் சிப் பொருத்தும் நடவடிக்கைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் இனிவரும் காலங்களில் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சீன பள்ளிகல்வித்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளன.