புஜாரே அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா
இன்று தொடங்கிய சிட்னி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் நாளில் நிதானமாக விளையாடி வலுவான ஸ்கோரை எட்டியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான மயாங்க் அகர்வால் 77 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையி புஜாரே நிதானமாக விளையாடி சதமடித்தார். அவர் சற்றுமுன் வரை 232 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து தொடரந்து விளையாடி வருகிறார்.
விராத் கோஹ்லி 23 ரன்களும் ரஹானே 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி சற்றுமுன் வரை 81.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது.