திருவாரூர் தொகுதியின் அமமுக வேட்பாளர்: தினகரன் அறிவிப்பு
திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது
இதனையடுத்து இந்த தொகுதியில் சாகுல் அமீது என்பவர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்
சற்றுமுன்னர் திருவாரூர் தொகுதியின் அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் என்பவரை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.காமராஜ் அவர்கள் மன்னார்குடி தொகுதி அமமுகவின் மாவட்ட செயலாளர் என்பதும் உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதும் மண்ணின் மைந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்வர் வரும் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.