18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் ஜனவரி 22-க்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது என்பது குறித்து பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி 28ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் தேர்தல் அறிவித்துவிட்டு பின் அந்த தேர்தல் ரத்து என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் மதுரை ஐகோர்ட் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply