10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதா சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இந்த மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் இடஒதுக்கீடு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும் என்பதால், அரசியல் அமைப்பு சட்டத்தின் 15 மற்றும் 16வது ஷரத்துகளை திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தற்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என சமத்துவத்துக்கான இளைஞர்கள் என்ற அமைப்பு மனு அளித்துள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த் மசோதாவை கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்த்திருந்தனர். மேலும் இது பொதுப்பிரிவினரின் வாக்கைப் பெற செய்யப்படும் செயல் என பாஜ., விமர்சிக்கப்பட்டது.

 

Leave a Reply