கஞ்சி தொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முயற்சி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது
இந்த நிலையில் போராட்டத்தின் அடுத்த பகுதியாக ஜனவரி 19, 20ம் தேதிகளில் 100 இடங்களில் பட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்
குறிப்பாக விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஆர்.ஆர்.நகர், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் இந்த கஞ்சித்தொட்டி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது