இளம்பெண்கள் ஓரினச்சேர்க்கை காதல் திருமணம்: பிரிக்க முயற்சிக்கும் உறவினர்களால் பரபரப்பு

இளம்பெண்கள் ஓரினச்சேர்க்கை காதல் திருமணம்: பிரிக்க முயற்சிக்கும் உறவினர்களால் பரபரப்பு

ஒடிஷா மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் திருமணம் செய்து கொண்டதற்கு அவர்களுடைய உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் 27 வயது சபித்ரி பரிடா என்பவரும் 28 வயது மோனலிசா நாயக் ஆகிய 2 பெண்கள் கடந்த பல வருடங்களாக தோழிகளாக இருந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பளித்து உள்ளது. இதையடுத்து சபித்ரியும், மோனலிசாவும் அரசு வக்கீல் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.

இதை அவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களை பிரிக்க முயன்றால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

Leave a Reply