அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தயார்
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று காலை மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. இதனை மதுரை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்ட பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 636 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் தயாராகினர்
வாடிவாசலில் இருந்து துள்ளி வரும் காளைகளை தழுவ முதல் சுற்றில் 75 காளையர்கள் களத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு, 5 அவசர உதவி ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.