ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி

ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதால் அவர் வரும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை கனிமொழி உறுதி செய்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறி தான் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

கனிமொழி வரும் தேர்தலில் தூத்துகுடி அல்லது மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply