குக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமமுக துணை பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் தரப்பில் குக்கர் சின்னம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பாக பரிசீலித்து பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஜனவரி 24-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். ஜனவரி 24ஆம் தேதி தினகரனின் கட்சிக்கூ குக்கர் சின்னம் கிடைக்குமா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது