சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமன வழக்கு: நீதிபதி திடீர் விலகல்

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமன வழக்கு: நீதிபதி திடீர் விலகல்

சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்யவிருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வழக்கில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை, பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய உயர்மட்ட தேர்வுக் குழு நீக்கம் செய்ததை அடுத்து, அவர் தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து இடைக்கால சிபிஐ இயக்குனராக கூடுதல் இயக்குனர் பொறுப்பு வகித்த நாகேஷ்வரராவ் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசு சாரா நிறுவனம் ஒன்று, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்பது தெரிந்ததே

Leave a Reply