அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது: அமைச்சர் ஜெயகுமார்
நேற்று அஜித் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை தமிழ் சினிமாவுலகையும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்தின் அறிக்கை குறித்த செய்தியை வெளியிடாத தமிழ் ஊடகமே இல்லை என்பதும், இதுகுறித்து கருத்து தெரிவிக்காத பிரமுகர்களும் இல்லை என்பதும் உண்மை
இந்த நிலையில் அஜித்தின் அறிக்கை குறித்து தமிழக அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, ‘நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்; அஜித்தின் தைரியம் பாராட்டக்கூடியது; திறந்த மனதோடு அஜித் தனது நிலையை கூறியிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இதேபோல் அஜித்தின் அறிக்கையை காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது