தம்பிதுரை கருத்து அதிமுகவின் கருத்தா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
அதிமுக-பாஜக கூட்டணி விரைவில் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக எம்பி தம்பிதுரை பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று விளக்கம் அளித்தார்.
மேலும் அதிமுக – பாஜக கூட்டணி என ராம்தாஸ் அத்வாலே கூறிய கருத்தை நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும், அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது என்றும் அன்னப்பறவை போல் பிரித்து பார்த்து எதிர்க்க வேண்டியதை எதிர்த்து, ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும் என்றும் கூறினார்