சென்னை மெரினாவில் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் இந்த நினைவிடத்தை கட்ட கூடாது என்று தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து சென்னை மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது