ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என சமீபத்தில் பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பளித்த நிலையில் இன்னும் தமிழக அரசிடம் இருந்து ஆலையை திறக்க சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறியும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உத்தரவிட கோரியும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது.
ஆனால் ஆலையை உடனே திறக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 29க்கு ஒத்திவைத்தது
மேலும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை ஜனவரி 29ல் முடித்து வைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.