ஆளுநரின் செயல்பாடு நீதியை படுகொலை செய்துள்ளது: அற்புதம்மாள் ஆவேசம்
ஆளுநரின் செயல்பாடு நீதியை படுகொலை செய்துள்ளது: அற்புதம்மாள் ஆவேசம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்காக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பொதுமக்களை சந்திக்க உள்ளார். கோவையில் நேற்று ஆரம்பித்த இந்த பயணம் ன்மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அற்புத்தம்மாள் கூறியதாவது: 28 ஆண்டு காலமாக பேரறிவாளன் விடுதலைக்காக போராடி வருகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக அரசு முறையாக அமைச்சரவையை கூட்டி, ஆளுநர் ஒப்புதலுக்கு முறையாக அனுப்பியது. அதில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திடுவதே முறை என்றாலும், ஆளுநர் நான்கரை மாதங்களாக காலதாமதம் செய்து வருகிறார்.
ஆளுநரின் நடவடிக்கை தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் எங்களது தரப்பு நியாயத்தை கொண்டு சேர்க்கும் வகையில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளோம். மக்களின் கருத்துக்களை கேட்டு இறுதி போராட்டம் பற்றி முடிவெடுப்பேன் என்றார். தண்டனை அனுபவித்த பிறகும் சிறையில் இருப்பது நியாயம் அல்ல.
ஆளுநரின் செயல்பாடு நீதியை படுகொலை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் மதிக்க வேண்டும். இந்த பயணம் எழுவர் விடுதலைக்கானது. விடுதலை கிடைக்கும் வரை எனது பயணம் தொடரும். தேர்தல் ஓட்டு அரசியல் தான் எங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டது. இது கேவலமான அரசியல். ஓட்டு அரசியல் லாபத்திற்காக தனது மகனை பயன்படுத்துவது நாகரீகமற்றது. ஆளுநர் கையொப்பம் இடும் வரை இந்த பயணம் தொடரும்
இவ்வாறு அற்புதம்மாள் கூறியுள்ளார்.