கடற்கரையில் சமையல் செய்தால் ரூ.2000 அபராதம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
கோவா கடலோரத்தில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ 3 மாதம் சிறை அல்லது உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சுற்றுலா பயணிகள் அதிகம் குவியும் கோவா கடலோரத்தில் மது அருந்துவது, அசைவ உணவு சமைத்து சாப்பிட்டு சுற்றுச்சுழலை அசிங்கப்படுத்துவதாக அதிக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கோவா கடலோர சுற்றுலா பயணிகளை நெறிப்படுத்த சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவா மாநில சட்டசபை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி கோவா கடலோரத்தில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவா கடலோரத்தில் மது குடித்து விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து 3 மாதம் வரை சிறையில் அடைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.