தளபதி 63 பற்றிய ஒரு முக்கிய தகவல் !

தளபதி 63 பற்றிய ஒரு முக்கிய தகவல் !

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி , மெர்சல் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றன . இதனை அடுத்து மீண்டும் அட்லீ – விஜய் கூட்டணி இணைந்துள்ளது . இந்த படம் தற்போது ‘தளபதி63 ‘ என்று அழைக்கப்படுகிறது.

இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட படம் என கூறப்படுகிறது . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தளபதியின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

தளபதி 63 படத்தை தயாரித்து வரும் ஏ. ஜி .எஸ் நிறுவனம் அவ்வப்போது இந்த படத்தை பற்றிய சில தகவல்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63 படத்தை பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

விஜய்-நயன்தாரா மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தில் விவேக் , யோகி பாபு , தீனா , ஆனந்த் பாபு , டேனியல் பாலாஜி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் ரூபன் படத்தொகுப்பாளராகவும் உள்ளனர்.

Leave a Reply