இலங்கை விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை வாங்கும் இந்தியா!

இலங்கை விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை வாங்கும் இந்தியா!

இலங்கை மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு விற்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்ததால் இந்தியா அதிருப்தியில் இருக்கும் நிலையில் இந்தியாவை சமாதானப்படுத்தும் வகையில் மாத்தளையில் உள்ள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் 70 சதவீத பங்குகளை இந்தியாவுக்கு விற்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மீதி 30 சதவீத பங்குகளே இலங்கை அரசிடம் இருக்கும் என தெரிகிறது

இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதை இந்தியா புனரமைக்கும் என்று இலங்கை விமான போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிலையத்தை 40 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். இதுதொடர்பான ஒப்பந்தம், இரு நாடுகளின் விமான நிலைய ஆணையங்களிடையே கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

Leave a Reply